திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்–கமாண்டோ படையினர் ஆய்வு
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சென்னை கமாண்டோ பாதுகாப்பு படையினர் ஒரே நேரத்தில் திடீர் ஆய்வு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,
தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள சிலைகள் மற்றும் பாதுகாக்கப்படும் சிலைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பெரிய கோவிலில் உள்ள சிலைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் திருவாரூரில் உள்ள பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு நேற்று பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவில் இடம் பெற்றுள்ள இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை திடீரென்று வருகை தந்தார். அங்கு வந்த அவர், சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்த சிலைகளை ஆய்வு செய்தார்.
இந்த மையத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளதாக தெரிகிறது. இந்த சிலைகள் அனைத்தும் சரியாக உள்ளதா? என்பது குறித்து முதல் கட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரைவில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இங்கு வந்து ஆய்வு செய்ய உள்ளதாக தெரிகிறது.
முன்னதாக சென்னை கமாண்டோ பாதுகாப்பு படையினர் சார்பில், திருவாரூர் தியாகராஜர் கோவிலின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு பாதுகாப்பு துறை ஆய்வாளர் மாறன் தலைமையில் நடந்தது. 10–க்கும் மேற்பட்ட கமாண்டோ காவலர்கள் கோவிலின் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கமாண்டோ பாதுகாப்பு படையினர் திடீர் ஆய்வு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story