குடிபோதையில் தகராறு; விவசாயி மீது பீர் பாட்டிலால் தாக்குதல் வாலிபருக்கு வலைவீச்சு


குடிபோதையில் தகராறு; விவசாயி மீது பீர் பாட்டிலால் தாக்குதல் வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Oct 2018 3:45 AM IST (Updated: 17 Oct 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொரடாச்சேரி,

கொரடாச்சேரி அருகே உள்ள பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 27). அதே கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (34). இருவரும் விவசாயிகள். இந்த நிலையில் புத்தூர் சுடுகாடு அருகே பாலாஜி தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு அருகில் ஸ்ரீதரும் தனியாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது பாலாஜிக்கும், ஸ்ரீதருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து ஸ்ரீதரின் தலையில் அடித்தார். இதில் ஸ்ரீதருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர், திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வாலிபருக்கு வலைவீச்சு

இதுகுறித்து ஸ்ரீதர் கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story