பாம்பன் ரோடு பாலத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு


பாம்பன் ரோடு பாலத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 16 Oct 2018 10:30 PM GMT (Updated: 16 Oct 2018 8:01 PM GMT)

பாம்பன் ரோடு பாலத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து, பாலம் நல்ல நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரோடு பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலை போக்குரத்து ரோடு பாலத்தில் நடைபெற்று வருகிறது. 79 தூண்களை கொண்டு கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பாலத்தின் மைய பகுதியானது ஸ்பிரிங் இணைப்பால் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாம்பன் ரோடு பாலத்தை நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

ரோடு பாலத்தின் மைய பகுதியில் உள்ள இணைப்புகளை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் உதவி கோட்ட பொறியாளர் மாரியப்பன் உள்பட அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, பாம்பன் ரோடு பாலத்தில் உள்ள அனைத்து தூண்களும் நல்ல நிலையில் உள்ளன. ரோடு பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. இதேபோல் ரோடு பாலத்தில் இருபுறமும் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளை எரிய விடுவதற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகிறோம். பாம்பனில் நான்கு வழிச்சாலை பாலம் தொடங்கி பணிகள் முடியும் வரையிலும் தற்போது உள்ள பாம்பன் ரோடு பாலத்தில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும். ரோடு பாலத்தை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story