மாவட்ட செய்திகள்

ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண் + "||" + Dual murder near Ramanathapuram Collector's office; 5 people are Saran

ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்

ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே பழிக்குப்பழியாக 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 5 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் கேணிக்கரை போலீஸ் நிலையம் உள்ளது. அந்த பகுதியில் நேற்று மாலை 5.30 மணி அளவில் 2 பேர் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு காரில் இருந்து 5 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கீழே இறங்கினர்.

இதை பார்த்ததும் அந்த 2 பேரும் சுதாரித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர். ஆனால் காரில் வந்த 5 பேரும் அவர்களை ஓட, ஓட விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டியது. இதில் ஒருவர் கலெக்டர் அலுவலகம் அருகிலும், மற்றொருவர் போலீஸ் டி.ஐ.ஜி. இல்லம் அருகிலும் கொல்லப்பட்டனர்.

இந்த வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் மீண்டும் காரில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர். பட்டப்பகலில் முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியிலேயே சில நிமிடங்களில் நடந்துமுடிந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து விசாரித்தனர். 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் கார்த்திக் (வயது 34), விக்னேசுவரன் (24) என்றும், அவர்கள் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே கடந்த 20.5.2018 அன்று பூமிநாதன், விஜய் ஆகியோர் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து 20 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய கார்த்திக்கும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சில தினங்களுக்கு முன்பு ஒரு பேக்கரியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திலும் கார்த்திக் நிபந்தனை ஜாமீன் பெற்று கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலையில் கையெழுத்திட்டு வந்தார். நேற்று மாலையும் கார்த்திக் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்தார்.

அவருடன் அவரது நண்பர் விக்னேசுவரன் வந்திருந்தார். அப்போது தான் இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் நடந்து சென்றபோது வெட்டிக் கொல்லப்பட்டனர். பூமிநாதன், விஜய் கொலைக்கு பழிவாங்கவே இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது.


இதற்கிடையில் கொலை தொடர்பாக வாலாந்தரவையை சேர்ந்த ரூபன்(25), முரளி (27), பாஸ்கரன்(40), அர்ச்சுனன்(25), முருகேசன்(37) ஆகிய 5 பேர் நயினார்கோவில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயல் எச்சரிக்கை தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் - கலெக்டர் வீரராகவராவ் தகவல்
வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாகவும், 39 தாழ்வான பகுதிகளில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
2. அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்; இந்து மக்கள் கட்சி மனு
தமிழகத்தில் அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.
3. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயற்சி மாயமான மனைவியை கண்டுபிடித்து தர கோரிக்கை
மாயமான மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. தேசிய விருது பெற்ற அணைக்கரைப்பட்டி மகளிர் குழுவுக்கு கலெக்டர் பாராட்டு
தேசிய அளவிலான சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்ட அணைக்கரைப்பட்டி மகளிர் குழுவிற்கு விருதினை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.
5. திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பஸ் முன் அமர்ந்து தர்ணா கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.