‘நம்பி வந்தவர்களை எல்லாம் கைவிட்டவர் கமல்ஹாசன்’ அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு
நம்பி வந்தவர்களை எல்லாம் கைவிட்டவர் கமல்ஹாசன் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
விருதுநகர்,
விருதுநகரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–
கமல்ஹாசன் என்னை தீயசக்தி என்று கூறியிருக்கிறார். நான் 1996– ம் ஆண்டு முதல் மக்களை சந்தித்து பெண்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக மக்களுக்காக பாடுபட்டு வருகிறேன். இதேபோல கமலும் மக்களை, பெண்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட வேண்டும். அவரை நம்பி யாரும் செல்ல முடியாது.
கமல்ஹாசன், தன்னை நம்பி வந்தவர்களையெல்லாம் கைவிட்டவர். நடிகை கவுதமி கூட, தனது மகளுக்காக வெளியேறியதாக கூறியிருந்தார். இதுகுறித்து மக்கள்தான் கருத்துக்கூற வேண்டும்.
இந்த அரசு குற்றம் யார் செய்திருந்தாலும் தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கும். பாலியல் புகார்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும். எந்த குற்றமும்நிகழ அரசு அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story