புள்ளம்பாடியில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் விவசாயிகள் மறியல்
புள்ளம்பாடியில் முள்ளால் சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டதால் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
கல்லக்குடி,
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் முள்ளால் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே ரெயில் பாதை செல்வதால் ரெயில்வே கேட் அமைத்துள்ளனர். இந்த சாலை வழியாக செல்வதால் புள்ளம்பாடியில் இருந்து செம்பரை, ஆனந்தபுரம், செங்கரையூர், பூண்டி மாதாகோவில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் செல்லும் பொதுமக்கள் சுமார் 2 மணி நேரம் பயணத்தையும், செலவையும் மிச்சப்படுத்தினர். மேலும் புள்ளம்பாடி பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் இவ்வழியாக தங்களது வயல்களுக்கு சென்று விவசாயம் செய்கின்றனர்.தற்போது நெல்நாற்று விடும் பணி நடைபெறுகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு இடுபொருள், விதைநெல் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த ரெயில்வே கேட்டில் செபாஸ்டின்மேரிஸ்டெல்லா(வயது52) என்பவர் பணியில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவருடன் சண்டையிட்டு தாக்கினர். இதில் காயமடைந்த செபாஸ்டின்மேரிஸ்டெல்லா லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
செபாஸ்டின்மேரிஸ்டெல்லா புகாரையடுத்து தென்னக ரெயில்வே, புள்ளம்பாடி- முள்ளால் ரயில்வேகேட்டை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்து நேற்று மூடியது. இதனால் பல கிராம மக்கள் போக்குவரத்துக்கு சிரமப்பட்டனர். மேலும் விவசாயிகள் விவசாய பணி பாதிக்கப்படுவதாக கூறி ரெயில்ரோட்டில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவலறிந்த லால்குடி தாசில்தார் ராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து விரைவில் பேசி பிரச்சினை தீர்க்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதால், விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story