‘குறைந்தது 150 கி.மீ. நடந்து சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும்’ பா.ஜனதா கட்டளைக்கு எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
வாக்காளர்களை சந்திக்க ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் குறைந்தது 150 கிலோமீட்டர் தூரம் நடக்கவேண்டும் என்று பா.ஜனதா தலைமை கட்டளையிட்டு உள்ளது. இதற்கு எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என இப்போதே கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டன.
இந்த நிலையில் ஆளும் பா.ஜனதாவும் தேர்தலுக்கு தயாராக தொடங்கி விட்டது. கட்சி எம்.எம்.ஏ.க்கள் தேர்தலுக்காக வகுக்கவேண்டிய திட்டங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில பா.ஜனதா தலைமை கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி பிறந்து 150 ஆண்டுகள் நடந்து வருகிறது. இதனை நினைவுகூறும் வகையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குறைந்தது 150 கிலோமீட்டராவது நடந்து சென்று வாக்காளர்களை சந்திக்கவேண்டும். எம்.எல்.ஏ.க்கள் காந்தியின் நினைவு நாளுக்குள் இதை செய்துமுடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எப்படி பிரசாரம் மேற்கொள்ளவேண்டும். மக்களை எப்படி சென்று அடையவேண்டும் என்பது குறித்து கட்சியில் உள்ள 121 எம்.எல்.ஏ.க்களுக்கும் விரிவான பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்கள் கருத்தை முன்வைத்துள்ளனர். அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறுகையில், “விவசாயிகளும், கிராமப்புறத்தை சேர்ந்தவர்களும் பருவமழை பொய்த்ததால் கவலையில் உள்ளனர். குறைந்த மழை பொழிவு காரணமாக ராபி பருவ பயிர் விதைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் வாழ்வாதாரமே ஆபத்தில் உள்ளபோது அரசியல் பிரச்சினை குறித்து அவர்களை எப்படி சென்று அணுகமுடியும்” என்றார்.
மும்பையை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. கூறுகையில், “நகர் பகுதி மக்கள் பெட்ரோல் விலை உயர்வையும், டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு குறைவதையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஒரு எம்.எல்.ஏ.வாக சாலை குறித்தோ சுகாதாரம் குறித்தோ என்னால் சொல்ல முடியும். ஆனால் பெட்ரோல் விலை உயர்வை குறித்தோ அல்லது டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு குறைந்தது குறித்தோ கேள்வி எழுப்பினால் என்னிடம் பதில் இல்லை” என்றார்.

Related Tags :
Next Story