வருகிற 31-ந் தேதி சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா: கர்நாடக மக்கள் கலந்துகொள்ள வேண்டும் - குஜராத் மந்திரி அழைப்பு
வருகிற 31-ந் தேதி நடைபெறும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் கர்நாடக மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று குஜராத் மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.
பெங்களூரு,
குஜராத் மின்சாரத்துறை மந்திரி சவுரவ்பாய் பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையோரம் 182 மீட்டர் உயரத்திற்கு, இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் இரும்பு சிலை நிறுவப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் சிலை ஆகும். இந்த சிலையை அமைக்க நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் கட்டுமான பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை பயன்படுத்தி இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
லிபர்ட்டி என்பவருக்கு 93 மீட்டர் உயரத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேலின் இந்த சிலை, உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெறுகிறது. நவீன இந்தியாவின் அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை அமைக்கும் திட்டம் பிரதமர் நரேந்திரமோடியின் மூளையில் இருந்து உதித்தது.
5 ஆண்டுகளுக்கு முன்பு இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நாடு முழுவதும் 28 மாநிலங்களில் 1 லட்சத்து 70 ஆயிரம் இடங்களில் இருந்து சிலை அமைக்க பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அதனால் அந்த சிலையுடன் நாட்டு மக்களுக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது.
இந்த சிலை திறப்பு விழா வருகிற 31-ந் தேதி நடக்கிறது. பிரதமர் மோடி, இந்த சிலையை திறந்து வைக்கிறார். இதையொட்டி கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா, முதல்-மந்திரி குமாரசாமியை நேரில் சந்தித்து, விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம். கர்நாடக மக்களும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன்.
வல்லபாய் பட்டேல் சிலையுடன் அவரது நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது. அது சுற்றுலா தலமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த சிலையை பார்க்க வருபவர்களுக்கு வழிகாட்ட 100 உள்ளூர் இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு சவுரவ்பாய் பட்டீல் கூறினார்.

Related Tags :
Next Story