சமையலை எளிதாக்கும் சாதனங்கள்


சமையலை எளிதாக்கும் சாதனங்கள்
x

சமையலை எளிதாக்கும் சாதனங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

டிராவல் குக்கர்

சமையலறை பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நோவா நிறுவனம் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் ஸ்லீக்கான டிராவல் குக்கரை வடிவமைத்துள்ளது. ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளாதவர்கள், அடிக்கடி பயணம் மேற்கொள்வோர் போன் றோருக்கு மிகவும் உபயோகமானது. மின்சாரம் இருந்தால் போதும். இது செயல்படும்.

டெப்லான் கோட்டட் என்பதால் உணவுப் பொருள்கள் அடிப்பிடிக்காது, தீய்ந்து போகாது. உணவு சமைக்கும் பாத்திரம், அதை எடுத்துச் செல்ல சரியான டிபன் பாக்ஸ், சாப்பிட ஸ்பூன் ஆகிய அனைத்தும் அடங்கியதாக இது வந்துள்ளது. அறிமுகத்தின்போது இதன் விலை ரூ. 2,490 ஆக இருந்தது. இப்போது அமேசான் இணையதளத்தில் 24 சதவீத சலுகையில் ரூ. 1,890- க்கு கிடைக்கிறது.

சிட்டிசன் ஸ்டீம் குக்கர்

சமையலறை பொருள் தயாரிக்கும் சிட்டிசன் நிறுவனம், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற, நீராவி மூலம் வேக வைத்த உணவுகளை தயாரித்து அளிக்கும் குக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு அடுப்பு தேவையில்லை. மின்சாரம் இருந்தால் போதும். இதைக் கையாள்வது எளிது. வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் மிகச்சிறந்த வடிவமைப்புடன் உருளை போன்று உள்ளது. நீராவி வேகம் குறைவு, ஆனால் உணவுப் பொருள்கள் நீங்கள் விரும்பும் வகையில் வேகவைக்கலாம். குக்கரில் பயன்படுத்தப்படும் கேஸ்கட் போன்ற ரப்பர் வளையம் கிடையாது. அதேபோல குக்கர் எழுப்பும் விசில் சப்தமும் இதில் கிடையாது. அதேபோல குக்கருக்கு நீராவி வந்ததும் போடும் வெயிட்டும் இதற்குத் தேவையில்லை.

இதில் சாதம் சமைக்கலாம், பால் காய்ச்சலாம், முட்டை வேக வைக்கலாம். நீராவியால் வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. உணவுப் பொருளின் சத்துகள் வீணாவதில்லை. இதனால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். நீராவி மூலம் உணவு சமைப்பதால் உணவில் உள்ள வைட்டமின்கள், மினரல்கள் அழிவதில்லை. பிரிட்ஜில் வைத்த ஜில்லிட்ட உணவையும் இதில் சூடுபடுத்தி சாப்பிடலாம். ஆரம்பத்தில் ரூ. 4,200-க்கு அறிமுகமான இந்த குக்கர் இப்போது 11 சதவீத தள்ளுபடியில் அமேசான் ஆன்லைனில் ரூ. 3,750-க்கு கிடைக்கிறது.

சுவிட்சர்லாந்து நிறுவனம் தயாரித்துள்ள காபி பில்டர்

பில்டர் காபி என்றாலே நம்மவர்களுக்கு தனி பிரியம். அதிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக காபி தயாரிப்பார்கள். அவர்கள் பயன்படுத்தும் காபி பொடியின் தன்மை, மணம் இவற்றுக்கேற்பவே காபியின் சுவை அமைகிறது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் பாரம்பரிய முறையிலான பில்டரை வடிவமைத்துள்ளது. இதில் காபி தூள் வடிகட்டும் பகுதியானது நிரந்தரமானது. குடுவை போரோசிலிகேட் கண்ணாடியால் ஆனது. இடைப்பட்ட பகுதி தோல் பொருளால் கட்டப்பட்டுள்ளது. மேல் பகுதியில் காபி தூளை போட்டு சுடு நீரை ஊற்றி சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் கண்ணாடி குடுவையில் டிகாஷன் அருமையாக இறங்கி இருக்கும். இதன் வடிவமைப்பை பார்க்கும்போதே காபி குடிக்கும் ஆசை தூண்டப்படும். இதன் விலை ரூ.8,525 ஆக உள்ளது.

Next Story