காஸ்ட்லி ஏர் பியூரிபயர்


காஸ்ட்லி ஏர் பியூரிபயர்
x
தினத்தந்தி 17 Oct 2018 10:40 AM IST (Updated: 17 Oct 2018 10:40 AM IST)
t-max-icont-min-icon

வீட்டிற்குள் சுத்தமான காற்று கிடைக்க இப்போது சந்தையில் பலவித நிறுவனங்கள் தயாரித்துள்ள காற்று சுத்திகரிப்பான்கள் உதவியாக உள்ளன.

குடிநீர் சுத்தமானதாக, சுகாதாரமானதாகக் கிடைப்பதில்லை. காற்றும் சுத்தமானதாக கிடைக்காத சூழல் உருவாகி வருகிறது. தலைநகர் டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கு காற்று மாசு அளவு அதிகரித்துள்ளது. வீட்டிற்குள் சுத்தமான காற்று கிடைக்க இப்போது சந்தையில் பலவித நிறுவனங்கள் தயாரித்துள்ள காற்று சுத்திகரிப்பான்கள் உதவியாக உள்ளன. அந்த வகையில் கோவே காற்று சுத்திகரிப்பான் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் இதன் விலை சற்று அதிகமாகும்.

550 சதுர அடி கொண்ட அறைக்கு மிகவும் பொருத்தமானது. அறையில் காற்றின் அளவு எந்த அளவு மாசடைந்துள்ளது என்பதைக் காட்டும் உணர் விளக்கு இதில் உள்ளது. அதேபோல் இதில் உள்ள பில்டரை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டும். அவ்விதம் மாற்ற வேண்டிய தருணத்தை உணர்த்தும் விளக்கும் இதில் உள்ளது. காற்றில் உள்ள அயனிகளை சுத்தப்படுத்தவும் இதில் உள்ள பேனை 3 நிலைகளில் கட்டுப்படுத்தவும் முடியும். இதை ஒரு மணி நேரம், நான்கு மணி நேரம் மற்றும் 8 மணி நேரம் வரை செயல்படுத்த முடியும். இது 16.8 அங்குல நீளம், 18.3 அங்குல உயரம் மற்றும் 9.6 அங்குல தடிமன் கொண்டது. இதன் எடை 5.6 கிலோ.

காற்றில் உள்ள மாசுக்களை உறிஞ்சுவதோடு, ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியை தூண்டும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்ஜைகளை உறிஞ்சும். அதேபோல துர்நாற்றம் உள்ளிட்ட காற்றில் கலந்து வரும் ரசாயனங்களையும் நீக்கி சுத்தமான காற்று அறையில் சுழல உதவும். இதில் ஹெச்.பி.ஏ. தொழில் நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளதால் காற்றில் உள்ள 99.97 சதவீத மாசுக்களை நீக்கிவிடும். சமையலறையிலிருந்து வெளிப்படும் எண்ணெய் புகை, வளர்ப்புப் பிராணியிடமிருந்து வரும் பூச்சிகள் உள்ளிட்டவற்றையும் 0.3 மைக்ரான் அளவு நுண்ணிய கிருமிகளையும் இது உறிஞ்சிவிடும். இதில் உள்ள கார்பன் பில்டர் கெட்ட வாசனைகளை நீக்கும். பிரீபில்டர்ஸ் மிகப் பெரிய தூசுக்களை உறிஞ்சிவிடும். உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அயனிகளை உறிஞ்சி சுத்தமான காற்று கிடைக்கச் செய்யும். இதன் விலை ரூ.39,999 ஆகும்.

Next Story