டாடா மோட்டார்ஸின் ஹெக்ஸா எக்ஸ்.எம். பிளஸ்


டாடா மோட்டார்ஸின் ஹெக்ஸா எக்ஸ்.எம். பிளஸ்
x
தினத்தந்தி 17 Oct 2018 11:03 AM IST (Updated: 17 Oct 2018 11:03 AM IST)
t-max-icont-min-icon

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபல மாடலான ஹெக்ஸாவில் மேம்பட்ட ரகத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகப்படுத்தி உள்ளது.

ஹெக்ஸா எக்ஸ்.எம். பிளஸ் (Hexa XM+) என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த எஸ்.யு.வி. கார் விலை ரூ. 15.27 லட்சத்தில் ஆரம்பமாகிறது. இந்த காரில் பல்வேறு சொகுசு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடலைக் காட்டிலும் 16 சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமானது சார்கோல் கிரே அலாய் சக்கரமாகும். தொடு திரை மிகவும் மென்மையானதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டீரிங் வீல் மென்மையான தோல் பிடிகளைக் கொண்டுள்ளது. இரட்டை ஏ.சி. வசதி முற்றிலும் தானியங்கி முறையில் (ஆட்டோமேடிக்) காரின் குளிர் தன்மையை கட்டுப்படுத்தும். முன்புறத்தில் பனிக்காலத்தில் பயன்படுத்தும் பாக் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் இதில் கூடுதல் வசதியாக சேர்க்கப்பட்டுள்ளது. வெளிச்சம் குறையத்தொடங்கியவுடனேயே முன்புற முகப்பு விளக்கு தானாகவே எரியத் தொடங்கும். அதேபோல மழை தூறல் விழுந்தவுடனேயே வைபர் செயல்படும். ரியர் வியூ மிரர் கண்ட்ரோல் மூலம் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் உள்ளது.

ஹெக்சா எக்ஸ்.எம். பிளஸ் முழுவதும் கருமையான உள்புறத்தைக்கொண்டது. அதேசமயம் இது 8 கண் கவர் நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. எலெக்ட்ரிக் சன் ரூப் வசதி இதில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு 2 ஆண்டு உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது. எஸ்.யு.வி. கார் வாங்க விரும்புவோர் எதிர்வரும் தீபாவளியை டாடா ஹெக்ஸா எக்ஸ்.எம். பிளஸ் வாங்கி கொண்டாடலாம்.

Next Story