பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி
மலையாள நடிகர் பிரித்விராஜ் சமீபத்தில் மிகவும் விரும்பி வாங்கியது லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்.
பிரபலமானவர்களின் வாகனம்
மலையாள திரைப்பட நடிகர் பிரித்விராஜ். இவரது முழுப்பெயர் பிரித்விராஜ் சுகுமாரன். நடிகராக அறியப்பட்ட இவர் மிகச் சிறந்த பின்னணி பாடகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். 36 வயதாகும் இவரது பிரதான பொழுதுபோக்கு வெளியூர் பயணம் மேற்கொள்வது மற்றும் புகைப்படம் எடுப்பதாகும். இவருக்கு கார்களின் மீதும் தனிப் பிரியம் உண்டு. விதவிதமான கார்களை வாங்கி ஓட்டுவதில் இவருக்கு ஏக குஷி. பெரும்பாலும் இவரிடம் அனைத்து இறக்குமதி சொகுசு கார்களும் உள்ளன. சமீபத்தில் இவர் மிகவும் விரும்பி வாங்கியது லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார். எர்ணாகுளத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு இவரது கார் வந்தபோது இதைப் பார்த்து வியப்படையாதவர்கள் இல்லை. இதன் விலை ரூ.3 கோடி. இதற்கு தனக்கு பிடித்தமான பேவரைட் ரிஜிஸ்திரேஷன் நம்பர் வாங்குவதற்கு ரூ.7 லட்சம் செலுத்தியுள்ளார் பிருத்விராஜ். இந்த அபிமான காரின் ரிஜிஸ்திரேஷன் எண்: கேஎல் 07 சிஎன் 1 (KL 07 CN 1)
Related Tags :
Next Story