மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி விமான நிலையத்தில் மூலிகை செடிகள் நடும் நிகழ்ச்சி + "||" + At Tuticorin Airport Herbal Plants for planting program

தூத்துக்குடி விமான நிலையத்தில் மூலிகை செடிகள் நடும் நிகழ்ச்சி

தூத்துக்குடி விமான நிலையத்தில் மூலிகை செடிகள் நடும் நிகழ்ச்சி
தூத்துக்குடி விமான நிலையத்தில் மூலிகை செடிகள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி விமான நிலையத்தில் மூலிகை செடிகள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

ஆயுர்வேத தினம்

தேசிய ஆயுர்வேத தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்திய விமான நிலைய ஆணையம் குழுமம் சார்பில் உலக சாதனை படைக்கும் வகையில் தென்னிந்தியாவில் உள்ள 21 விமான நிலையங்களில் காலை 10 மணி முதல் 10.05 மணிக்குள் 21 ஆயிரம் மூலிகை செடிகள் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்படி தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் மூலிகை செடிகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் கண்ணன், ஆறுமுகம் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் 298 பேர் கலந்து கொண்டு 4 ஆயிரத்து 550 மூலிகை செடிகளை நட்டனர். இதில் பொன்னாங்கன்னி, நித்தியகல்யானி, வெற்றிலை, கற்றாழை, வல்லாரை, துளசி, ஓமம், சித்தரத்தை, பெரியாநங்கை உள்ளிட்ட 15 வகையான மூலிகை செடிகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் விமான நிலைய அலுவலர்கள், விமான நிறுவன அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உலக சாதனை

இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கூறும் போது, தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி மூலிகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தென்னிந்தியாவில் உள்ள 21 விமான நிலையங்களிலும் ஒரே நேரத்தில் 5 நிமிடத்தில் 21 ஆயிரம் மூலிகை செடிகளை நட்டு உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்படி 5 நிமிடத்தில் 4 ஆயிரத்து 550 செடிகள் நடப்பட்டு உள்ளன. இந்த ஆணவங்கள் அனைத்தும் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யும் அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. விமான நிலையத்தில் ரூ.4½ கோடி போதைப்பொருளுடன் பிரேசில் நாட்டு பெண் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை, உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தபிரேசில் நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
2. விமான நிலையத்தில் குழந்தையை மறந்துவிட்ட தாய்...! விமானத்தை திருப்பிய விமானி...!
விமான நிலையத்தில் பெண் ஒருவர் குழந்தையை மறந்து விட்டதால், விமானத்தை விமானி திருப்பிய விநோதமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
3. விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவு
விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
4. சென்னை விமான நிலையத்தில் தரையில் பதிக்கப்பட்ட கற்கள் உடைந்து திடீர் பள்ளம், பெண் பயணி காயம்
சென்னை விமான நிலையத்தில் தரையில் பதிக்கப்பட்ட கற்கள் உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் விழுந்து ஒரு பெண் பயணி காயம் அடைந்தார்.
5. புதுவை விமான நிலையத்தில் வெங்கையாநாயுடுவிற்கு வரவேற்பு
புதுவை வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.