தூத்துக்குடியில் மகளை கொன்ற தந்தையை கைது செய்ய போலீசார் தீவிரம்
தூத்துக்குடியில் மகளை கொன்ற தந்தையை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மகளை கொன்ற தந்தையை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சிறுமி கொலைதூத்துக்குடி ராஜீவ்நகர் 8–வது தெருவை சேர்ந்தவர் மகேசுவரன் (வயது 40). இவருடைய மனைவி கங்கா (26). இவர் தூத்துக்குடி குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சன்விகா (6). இவள் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 2–ம் வகுப்பு படித்து வந்தாள்.
மகேசுவரன் வெளிநாடு செல்வதற்காக மனைவியிடம் பணம் கேட்டார். இதனால் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 15–ந் தேதி கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனவேதனை அடைந்த மகேசுவரன், தனது மகள் சன்விகாவுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தானும் குடித்து உள்ளார். அதன்பிறகு சன்விகா, மகேசுவரன் ஆகிய 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சன்விகா நேற்று முன்தினம் காலையில் பரிதாபமாக இறந்தார்.
கைது செய்ய தீவிரம்இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட் போலீசார், மகளை கொன்றதாக மகேசுவரன் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் மகேசுவரன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமான பிறகு கைது செய்வதற்காக போலீசார் தீவிரமாக உள்ளனர்.