அ.தி.மு.க. 47–வது ஆண்டு தொடக்க விழா எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
அ.தி.மு.க. 47–வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
உத்திரமேரூர்,
வாலாஜாபாத்தில் அ.தி.மு.க. 47–வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மாலை அணிவித்து, அங்குள்ள அ.தி.மு.க. கொடியை ஏற்றிவைத்தார். துணை செயலாளர் அத்திவாக்கம் ரமேஷ், ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் தங்க பஞ்சாட்சரம், தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன், உத்திரமேரூர் வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் எம்.கே.பி.வேலு, நகர செயலாளர் கே.லட்சுமணன், மாவட்ட இளைஞரணி பொருளாளர் ஜெயவிஷ்ணு, துணை செயலாளர் பி.சசிக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கே.கங்காதரன், முன்னாள் ஊராட்சி ஒன்றயக்குழு துணைத்தலைவர் மானம்பதி ரவிசங்கர், நகர துணை செயலாளர் வி.டி.பொன்னுசாமி, சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் சர்தார்கான் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டு மாலை அணிவித்தனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினர். பிறகு ஏழைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், உள்பட பலர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலைகள் அணிவித்து வணங்கினர். காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க.பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் முத்தியால்பேட்டையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்குஇனிப்பு வழங்கினார்.
காஞ்சீபுரம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தும்பவனம் டி.ஜீவானந்தம் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.