புதுப்பட்டினம் கிராமத்தில் மின்னல் தாக்கி கோபுரம் சேதம்
தொண்டி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ளது புதுப்பட்டினம். இந்த கிராமத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது அங்குள்ள கடற்கரையோரத்தில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் கோபுரத்தில் மின்னல் தாக்கியதில் சிலுவை சேதமடைந்தது.
மேலும் அந்த கிராமத்தில் பலரது வீடுகளில் இருந்த டி.வி.க்கள், மின் விளக்குகள் உள்ளிட்ட மின் சாதனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து புதுப்பட்டினம் கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் தாசில்தார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வருவாய் ஆய்வாளர் மீனாம்பாள், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story