புதுக்கோட்டையில் மண்டல அளவிலான நீச்சல் போட்டி


புதுக்கோட்டையில் மண்டல அளவிலான நீச்சல் போட்டி
x
தினத்தந்தி 18 Oct 2018 3:45 AM IST (Updated: 18 Oct 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருச்சி மண்டல அளவிலான நீச்சல் போட்டி புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை,

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருச்சி மண்டல அளவிலான நீச்சல் போட்டி புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருச்சி, முசிறி, லால்குடி, இலுப்பூர், மணப்பாறை ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் வருகிற நவம்பர் மாதம் 15, 16 மற்றும் 17-ந் தேதிகளில் நாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறையை சேர்ந்த உடற்கல்வி ஆய்வாளர், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Next Story