மாவட்ட செய்திகள்

ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை + "||" + Growing price in Jowar Market

ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை

ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை
ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுரை, நெல்லை, கொடைக்கானல் போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இவற்றை வாங்கி செல்ல உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும், கேரளாவை சேர்ந்தவர்களும் அதிகாலையிலேயே தோவாளையில் குவிவார்கள். இங்கிருந்து வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக சாதாரண நாட்களில் விலை குறைவாகவும், பண்டிகை நாட்களில் விலை உயர்ந்தும் காணப்படும்.

தோவாளை மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக பூக்களின் விலை குறைவாக காணப்பட்டது. ஆயுதபூஜை விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் நேற்று தோவாளை பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. பூக்களை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்தனர். அவர்கள் போட்டிப்போட்டு கொண்டு பூக்களை வாங்கினர். இதனால், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.400-க்கு விற்பனையான மல்லிகை ரூ.800 உயர்ந்து நேற்று ரூ.1,200-க்கு விற்பனையானது. இதுபோல் பிச்சி, முல்லை ஆகிய பூக்கள் ரூ.600-ல் இருந்து ரூ.1000 -மாக உயர்ந்தது.

தோவாளை பூ மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளிப்பூ ரூ.250, கனகாம்பரம் ரூ.500, வாடாமல்லி ரூ.130, சிவப்பு கேந்தி ரூ.100, சம்பங்கி ரூ.350, ரோஜா (100 எண்ணம்) ரூ.30, பட்டன்ரோஸ் ரூ.150, துளசி ரூ.50, தாமரை (100 எண்ணம்) ரூ.1000, பச்சை ரூ.10, கோழிப்பூ ரூ.50, கொழுந்து ரூ.120, மருக்கொழுந்து ரூ.150, மஞ்சள்கேந்தி ரூ.130, சிவந்தி மஞ்சள் ரூ.150, வெள்ளை சிவந்தி ரூ.200, ஸ்டெம்பு ரோஸ் (1கட்டு) ரூ.150 என விற்பனையானது.

தொடர்புடைய செய்திகள்

1. தடை காலம் தொடங்கியது: கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு
மீன்பிடி தடை காலம் தொடங்கி உள்ளதால் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை உயர்ந்து உள்ளது.
2. திருச்சி காந்திமார்க்கெட்டில் கடைகளுக்கான வாடகை உயர்வு; காய்கறிகள் விலை அதிகரிக்க வாய்ப்பு
திருச்சி காந்திமார்க்கெட்டில் கடைகளுக்கான வாடகை உயர்வால் காய்கறிகளின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய கட்டணத்தை செலுத்த வியாபாரிகள் மறுத்து வருகின்றனர்.
3. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு; கல்வியாளர்கள் அதிர்ச்சி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
4. கடந்த ஆண்டு கிலோ ரூ.10; தற்போது ரூ.4-க்கு விற்பனை: பரங்கிக்காய் விளைச்சல் அமோகம்; விலை வீழ்ச்சி
தஞ்சை பகுதிகளில் பரங்கிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. கடந்த ஆண்டு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட பரங்கிக்காய் தற்போது ரூ.4-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வியாபாரிகள் யாரும் வாங்குவதற்கும் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5. கஜா புயல் எதிரொலி: கரூர் மண்டியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி
கஜா புயல் எதிரொலி காரணமாக கரூர் மண்டியில் வாழைத்தார் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.