டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 3 பேர் பலி
மும்பையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர். 13 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மும்பை,
மும்பையில் இந்த ஆண்டு மழைக்கால நோய்களால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். எலிக்காய்ச்சல், டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல் நோய்களுக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டன. மும்பையில் தொடர்ந்து டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல் பரவி கொண்டு இருக்கின்றன. இதில், டெங்கு காய்ச்சலுக்கு 9 பேர் பலியாகி இருந்தனர்.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்து இருப்பதாக மாநகராட்சியின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மும்பையில் மழைக்கால நோய்களுக்கு இந்த ஆண்டு 27 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 12 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்கள். இந்த மாதம் கடந்த 15 நாட்களில் மட்டும் பன்றிக்காய்ச்சலால் 13 பேர் பாதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு மாநகராட்சி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 11 நாட்களில் மும்பை நகரம் மற்றும் புறநகரத்தின் 1,076 பகுதிகளில் மாநகராட்சி நடத்திய சோதனையில் 2,108 இடங்களில் நோய் பரப்பும் கொசு புழுக்கள் உற்பத்தியானது கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது’’ என்றார்.

Related Tags :
Next Story