மாவட்ட செய்திகள்

வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு + "||" + College student murder before house

வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
வீட்டின் முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தடுக்க சென்ற அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மதுரை,

மதுரை அனுப்பானடி தெய்வக்கன்னிதெருவை சோந்தவர் பாலமுருகன். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 20), மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு பிரவீன்குமார் அவரது நண்பர் காளியுடன் வீட்டின் முன்பு நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் பிரவீன்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அதை தடுக்க சென்ற அவரது நண்பர் காளியையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரவீன்குமார் பரிதாபமாக இறந்தார். படுகயாம் அடைந்த காளி சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் பிரவீன்குமார் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வது வழக்கம். இதனால் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சைலோ கண்ணன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அடிக்கடி இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்து பிரவீன்குமாரை கண்ணன் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதையடுத்து பிரவீன்குமார் பாட்டி வீட்டில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். தற்போது கல்லூரிக்கு விடுமுறை என்பதால் பிரவீன்குமார் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு வந்த கண்ணன் பிரவீன்குமாரை பார்த்ததும் அவரிடம் தகராறு செய்தார். பின்னர் அவர் ஆத்திரத்தில் பிரவீன்குமாரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் கண்ணன் பிரவீன்குமாரை கொலை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு அனுப்பானடி அம்பேத்கார் நகரை சேர்ந்த அரசமகாராஜன்(20) என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளார். அதில் அவர் தலையில் சிறிய காயத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் தான் கண்ணன் அனுப்பானடி பகுதிக்கு வந்து பிரவீன்குமாரை கொலை செய்துள்ளார்.

சைலோ கண்ணன், டோரி ராஜவேல், சோப்பு செல்வகுமார், அய்யர் பிரவின்குமார், விஜி, பாலகணேஷ், மணி, அருண் ஆகிய 8 பேரை தெப்பக்குளம், அவனியாபுரம் போலீசார் தேடி வருகிறார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரி, கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்: கால்வாயில் குப்பைகளை வீசினால் கடும் நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
கால்வாயில் குப்பைகளை வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.
2. வாழவச்சனூர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவியை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்க்க வேண்டும் - மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு
வாழவச்சனூர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவியை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.
3. காரைக்கால் கல்லூரியை மூடுவது ஜிப்மரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் - முன்னாள் எம்.பி. ராமதாஸ் கருத்து
காரைக்காலில் உள்ள மருத்துவ கல்லூரியை மூடுவது ஜிப்மரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் கூறியுள்ளார்.
4. காரைக்குடியில் மருத்துவம், சட்டக்கல்லூரி தொடங்கப்படும்; அழகப்பா கல்விக்குழுமங்களின் தலைவர் பேட்டி
காரைக்குடியில் மருத்துவக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என்று அழகப்பா கல்விக்குழுமங்களின் தலைவர் கூறினார்.
5. திருச்செந்தூரில் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் சி.பா.ஆதித்தனார்–பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு
திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.