சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது
தண்டையார்பேட்டையில், 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை தண்டையார்பேட்டை, லைட் அவுஸ் நகரை சேர்ந்தவர் மார்டின் அலெக்ஸ் ஜோசப் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மார்டின் அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துவந்தார்.
மார்டின் குடிபோதையில் அந்த பெண்ணின் வீட்டுக்கு வரும்போது அவரது 16 வயது மகளிடமும் அவ்வப்போது பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதனால் அந்த சிறுமி மணலியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் மணலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி எண்ணூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் மார்டின் அலெக்ஸ் ஜோசப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.