மண்ணிவாக்கத்தில் ஆராய்ச்சி மாணவரை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது


மண்ணிவாக்கத்தில் ஆராய்ச்சி மாணவரை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2018 3:42 AM IST (Updated: 20 Oct 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

மண்ணிவாக்கத்தில் ஆராய்ச்சி மாணவரை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வண்டலூர்,

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவர் பாபு (வயது 29), இவர் மண்ணிவாக்கம் விவேகானந்தர் நகர் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் தங்கி, சென்னை பல்கலைக்கழகத்தில் கனிம வேதியியல் ஆராய்ச்சி மாணவராக படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 15–ந் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாபுவை எழுப்பி மர்மநபர்கள் 3 பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ரூ.800–ஐ பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பாபு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை வெட்டியதாக ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த தீபக் (27) என்பவரை கைது செய்தனர்.


Next Story