மதுக்கடையில் மோதல்: தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது


மதுக்கடையில் மோதல்: தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2018 3:30 AM IST (Updated: 20 Oct 2018 6:59 PM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வில்லியனூர்,

வில்லியனூர் கணுவாப்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 31), செங்கல் சூளை தொழிலாளி. இவர் வில்லியனூர் கோட்டைமேட்டில் உள்ள மதுக்கடைக்கு குடிக்க சென்றார். அங்கு கணுவாப்பேட்டை பொறையாத்தமன் கோவில் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரகாசும் (29) மது குடித்தார். குடிபோதையில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரகாஷ், அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து லட்சுமணனை தாக்கினார். இதில் அவரது முதுகில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேலைய்யன், உதவி சப்–இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.


Next Story