சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சார்ஜாவுக்கு செல்ல முயன்ற வாலிபர் கைது
போலி பாஸ்போர்ட்டில் சென்னையில் இருந்து சார்ஜாவுக்கு செல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு விமானம் சென்றது. முன்னதாக அதில் செல்லவந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது விருத்தாசலத்தைச்சேர்ந்த தங்கவேல் (வயது 30) என்பவர் நூர்முகமது என்பவரது பாஸ்போர்ட்டில் தனது புகைப்படத்தை மாற்றி ஒட்டி, போலி பாஸ்போர்ட்டில் சார்ஜாவுக்கு செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தங்கவேலை கைது செய்த குடியுரிமை அதிகாரிகள், மேல் விசாரணைக்காக அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story