நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தத்தை திருத்தம் செய்தது தி.மு.க. - அமைச்சர் தங்கமணி பேட்டி


நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தத்தை திருத்தம் செய்தது தி.மு.க. - அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 21 Oct 2018 4:45 AM IST (Updated: 21 Oct 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தத்தை திருத்தம் செய்தது தி.மு.க. என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு குளத்துக்கு குழாய் மூலம் நீர் நிரப்பும் திட்ட தொடக்க விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு –ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–

டெண்டர் இல்லாமல் நிலக்கரி வாங்குவது தொடர்பாக ஒப்பந்தத்தை 20–8–2009 அன்று திருத்தம் செய்தது தி.மு.க. அரசு. அவர்கள்தான் பழைய முறையை திருத்தம் செய்து முன்மாதிரியாக நிலக்கரி கொள்முதல் செய்தார்கள். இப்போது நிலக்கரி இல்லாத காரணத்தால் வெறும் 80 ஆயிரம் டன் மட்டுமே வாங்கி இருக்கிறோம். தி.மு.க. ஆட்சியின்போது லட்சக்கணக்கான டன் கொள்முதல் செய்தனர். எனவே எங்களைப்பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்ட முடியாது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘தமிழகத்தில் கோமாரி நோயை தடுக்க வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு மாதத்துக்கு முன்பே அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டு உள்ளது. வேறு காரணங்களால் கால்நடைகள் இறக்கும் நிலையை கோமாரி என்று காரணம் கூறக்கூடாது’ என்றார்.


Next Story