குறுஞ்சான்வயலில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு


குறுஞ்சான்வயலில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு
x
தினத்தந்தி 21 Oct 2018 4:15 AM IST (Updated: 21 Oct 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே குறுஞ்சான்வயலில், கபடி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே குறுஞ்சான்வயலில் ஆண்டுதோறும் கபடி போட்டி நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் கபடிபோட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், சிவகங்கை, குளித்தலை, புதுக்கோட்டை, திருமயம், கீரனூர், இலுப்பூர், விராலிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிபடுத்தின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது.

இதில் முதல் பரிசை காஞ்சிராம்பட்டி அணியும், 2-வது பரிசை குறுஞ்சான்வயல் அணியும், 3-வது பரிசை புங்கினிப்பட்டி அணியும், 4-வது பரிசை ராஜகிரி அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

கபடி போட்டியை அன்னவாசல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள், கபடி ரசிகர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை குறுஞ்சான்வயல் இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

Next Story