எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சியில் இன்று நடக்கிறது
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருச்சி,
அதிகாரம், அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அரசியலாய் அணி திரள்வோம், அதிகாரத்தை வென்றெடுப்போம் என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திருச்சி ஜி–கார்னரில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஜோதிபாபுலே பெயரில் மாநாட்டு திடலின் நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் ‘நெருக்கடிக்குள்ளாகும் மதசார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கும், ஒடுக்கப்பட்ட பெண்களும், அரசியல் எழுச்சியும் என்ற தலைப்பில் பெண்களுக்கான கருத்தரங்கும் நடக்கிறது.
மாலை 3 மணிக்கு பெரியார் அரங்கில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி, துணைத்தலைவர் தெகலான் பாகவி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். எங்களது மாநாட்டை தொடர்ந்து அரசியல் மாற்றமும் ஏற்படும். மேலும் தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளம் அணு உலை 15 நாட்களுக்கு ஒருமுறை இயக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த இரு ஆலைகளையும் மூடாவிட்டால் பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story