மனைவியை கத்தியால் வெட்டியவருக்கு 1 ஆண்டு ஜெயில் - கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை கத்தியால் வெட்டியவருக்கு 1 ஆண்டு ஜெயில் - கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 22 Oct 2018 3:15 AM IST (Updated: 22 Oct 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை கத்தியால் வெட்டியவருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது54). இவரது மனைவி கமலாபாய். பிரகாசுக்கு சமீபகாலமாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர் அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டு வந்தார். கடந்த மே மாதம் 23-ந் தேதி வழக்கம்போல பிரகாஷ் மனைவியிடம் சண்டைபோட்டார். இந்த சண்டை முற்றியதில் கடும் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் கத்தியால் மனைவியின் முகம், வயிற்றில் வெட்டினார் இதில் படுகாயமடைந்த கமலாபாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாசை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு மனைவியை கத்தியால் வெட்டிய பிரகாசுக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.
1 More update

Next Story