மேல்மருவத்தூர் அருகே 8–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது


மேல்மருவத்தூர் அருகே 8–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 22 Oct 2018 4:00 AM IST (Updated: 22 Oct 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

மேல்மருவத்தூர் அருகே 8–ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகையை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஊஞ்சல் விளையாடிக் கொண்டு இருந்த போது, பக்கத்து வீட்டை சேர்ந்த நாகதாஸ் (வயது 39) என்ற தொழிலாளி திடீரென அங்கு வந்தார்.

பின்னர் அவர் சிறுமியை அருகில் உள்ள மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தை தனது தாயிடம் சிறுமி கண்ணீருடன் விவரித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகதாசை கைது செய்தார். பின்னர் மதுராந்தகம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நாகதாஸ், நீதிபதி உத்தரவின் பேரில் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story