மத்திய, மாநில அரசுகள் ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும்
ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என பட்டியல் இன மக்கள் நடவடிக்கை குழு வலியுறுத்தி உள்ளது.
தஞ்சாவூர்,
அகில இந்திய பட்டியல் இன மக்கள் நடவடிக்கை குழு மண்டல நிர்வாகிகளின் ஆலோனை கூட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் திருப்பூர் டாக்டர் பத்திரன்ஜி தலைமை தாங்கி பேசினார். கவுரவ தலைவர் ராஜேஸ்வரன், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், நிர்வாக தலைவர் ராஜராஜன், பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் ஏ.எம்.ராஜா, துணைத்தலைவர் வக்கீல் நடராஜன், செயலாளர் டாக்டர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக மாவட்ட மகளிர் அணி செயலாளர் மேனகா சுந்தர்ராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஆதி திராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவின்படி மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆதிதிராவிடர்களை கொண்டு நிரப்ப வேண்டும். ஆதிதிராவிட மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை தடுக்க நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை பட்டியலிடப்பட்ட மக்கள் நலத்துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் அழகேசன், டாக்டர் ராஜீவ்காந்தி, பாலு, பிரபாகரன், வக்கீல்கள் முத்துவேல், ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் அஜித்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story