சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பதை கண்டித்து பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியல்


சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பதை கண்டித்து பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Oct 2018 3:30 AM IST (Updated: 22 Oct 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிப்பதை கண்டித்து, பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு ஒன்றை அளித்தது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்துமக்கள் கட்சி சார்பில் தீர்ப்பை ரத்து செய்ய கோரியும், பாராளுமன்றத்தில் இதற்காக புதிய சட்டத்தை நிறைவேற்றக்கோரியும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது

அதன்படி நேற்று காலை இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட தலைவர் தேவா தலைமையில் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு-சென்னை மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராகவும், சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அதன்படி புதுச்சேரி மாநில தலைவர் மஞ்சினி, கடலூர் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் புருஷோத்தமன், இளைஞரணி காந்தி, பாலச்சந்தர் உள்பட 11 பேர் கைதானார்கள். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story