மானாமதுரை அருகே குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


மானாமதுரை அருகே குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2018 10:45 PM GMT (Updated: 22 Oct 2018 7:08 PM GMT)

மானாமதுரை அருகே குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே சித்தலகுண்டு கிராமத்தில் தனி நபர் செம்மண் குவாரி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் 6 மாத காலத்திற்கு அனுமதி வழங்கியது. மேலும் இந்த குவாரி அமைய உள்ள இடம் மழைநீர் கண்மாய்க்கு தண்ணீர் வரும் பாதையாக உள்ளது.

மேலும் கண்மாய்க்கு வரும் மழைநீர் குவாரியிலேயே தேங்கி விவசாயம் பாதிப்பது மட்டுமல்லாமல் இந்த பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

இதையடுத்து இந்த குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆண்டி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கிளை தலைவர் சங்கு, மாவட்ட தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் வீரையா உள்பட விசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story