போலீஸ்காரர் வீட்டில் திருடிய 2 பேர் கைது 35 பவுன் நகைகள்- ரூ.1 லட்சம் மீட்பு


போலீஸ்காரர் வீட்டில் திருடிய 2 பேர் கைது 35 பவுன் நகைகள்- ரூ.1 லட்சம் மீட்பு
x
தினத்தந்தி 23 Oct 2018 3:45 AM IST (Updated: 23 Oct 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை போலீசார் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் குளித்தலை- முசிறி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

குளித்தலை,

குளித்தலை போலீசார் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் குளித்தலை- முசிறி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நாகப்பட்டினம் அருகே உள்ள சீயாத்தமங்கை பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் சீனி (என்கிற) சீனிவாசன்(வயது 28), துறையூர் பகுதியை சேர்ந்தவரும் தற்போது குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளியில் வசித்து வரும் நடராஜன் மகன் சுரேஷ் (என்கிற) பச்சமுத்து(30) என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் வந்த மோட்டார் சைக்கிளை திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து திருடிவந்ததும், குளித்தலை காவிரிநகர் பகுதியில் வசிக்கும் தோகைமலை போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமை காவலராக பணிபுரியும் ராஜேந்திரன் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதேபோல் கரூர் மாவட்டம் பாலவிடுதி, லாலாபேட்டை, மாயனூர் ஆகிய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து மொத்தம் 35 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம், ஒரு கணினி, திருடி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மீட்ட போலீசார் அவர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story