அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்தவர் கொலை நண்பர் போலீசில் சரண்


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்தவர் கொலை நண்பர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 22 Oct 2018 10:00 PM GMT (Updated: 22 Oct 2018 9:18 PM GMT)

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடிசெய்தநண்பரை கொலை செய்தவர் போலீசில் சரண் அடைந்தார்.

தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது41). இவர் நேற்று முன்தினம் மதியம் சட்டையில் ரத்த கறைகளுடன் மகாத்மாபுலே போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் பணத்தகராறில் தனது நண்பர் அனில்(38) என்பவரை கல்யாணில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார்.

இதையடுத்து போலீசார் கொலை நடந்த தங்கும் விடுதிக்கு சென்று அனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தோசை கைது செய்தனர்.

சந்தோஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அனில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.35 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்து அனிலை தங்கும் விடுதிக்கு வரவழைத்து கொலை செய்துவிட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுதான் கொலைக்கான உண்மையான காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story