ஓரினச்சேர்க்கைக்கு மிரட்டிய வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து 3 சிறுவர்களிடம் விசாரணை


ஓரினச்சேர்க்கைக்கு மிரட்டிய வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து 3 சிறுவர்களிடம் விசாரணை
x
தினத்தந்தி 23 Oct 2018 4:00 AM IST (Updated: 23 Oct 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

புனேயில், ஓரினச்சேர்க்கைக்கு மிரட்டிய வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்திய 3 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனே எரவாடா லட்சுமி நகர் குடிசை பகுதியை சேர்ந்த வாலிபர் தினேஷ் காம்பிளே(வயது24). இவர் நேற்றுமுன்தினம் திலக்ரோடு பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு சிறுவர்கள் 3 பேரை அழைத்து சென்று இருக்கிறார். அங்கு 2 சிறுவர்களை முதல் மாடியில் நிற்கும்படி கூறிவிட்டு ஒரு சிறுவனை தன்னுடன் 2-வது மாடிக்கு அழைத்து சென்றார்.

பின்னர் அங்கு வைத்து சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து உள்ளார். இதனால் சிறுவன் அதிர்ச்சி அடைந்தான். உறவுக்கு மறுத்த அவனை தினேஷ் காம்பிளே தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்துபோன சிறுவன் அலறினான். சத்தம்கேட்டு மற்ற 2 சிறுவர்களும் 2-வது மாடிக்கு ஓடிவந்தனர். பின்னர் சிறுவர்கள் 3 பேரும் சேர்ந்து தினேஷ் காம்பிளேயின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக குத்தினர்.

இதில் அவருக்கு வயிறு, நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த தினேஷ் காம்பிளே அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் 3 பேரையும் பிடித்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story