25 சதவீத போனஸ் வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


25 சதவீத போனஸ் வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2018 4:15 AM IST (Updated: 23 Oct 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

25 சதவீத போனஸ் வழங்கக்கோரி திருவாரூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்து தொழிற் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பொது செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். சி.ஜ.டி.யூ. கிளை தலைவர் ராமச்சந்திரன், தொ.மு.ச. கிளை செயலாளர் முத்தையன், நிர்வாகி அம்பேத்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஜ.டி.யூ. பொதுச்செயலாளர் வைத்தியநாதன் கலந்து கொண்டு பேசினார்.

போக்குவரத்து கழகங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்். பழி வாங்கும் நடவடிக்கை கைவிட வேண்டும். பணி ஓய்வின்போதே பணப்பலன்களை முழுமையாக வழங்க வேண்டும். கடந்த 2003 ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். பஞ்சப்படி நிலுவை, விடுப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து கழகங்களுக்கு பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.7 ஆயிரம் கோடியை திருப்பி செலுத்த வேண்டும். ஓய்வு பெறும்போது பணப்பலன்கள் அனைத்தையும் முழுமையாக வழங்க வேண்டும். 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மன்னார்குடி பணிமனை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மத்திய தொழிற்சங்க மாநில துணை பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story