காஞ்சீபுரம் அருகே பலகாரத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு வியாபாரி தற்கொலை


காஞ்சீபுரம் அருகே பலகாரத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2018 4:00 AM IST (Updated: 23 Oct 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே பலகாரத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் சப்பாணிபிள்ளையார்கோவில் தெருவில் வசித்து வந்தவர், கிருஷ்ணமூர்த்தி(வயது 70). இவர், காஞ்சீபுரம் அடுத்த நெமிலியில் மூக்கு கண்ணாடி விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.

இவருடைய மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு பிள்ளைகள் இல்லாததால் கிருஷ்ணமூர்த்தி மட்டும் தனியாக வசித்து வந்தார்.

மனைவி இறந்த சோகம், குழந்தை இல்லாத ஏக்கத்தால் கிருஷ்ணமூர்த்தி மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் காஞ்சீபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் ரெயில்வே கேட் அருகே உள்ள வயல்வெளியில் இனிப்பு பலகாரத்தில் பூச்சு மருந்தை (விஷம்) கலந்து சாப்பிட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story