குண்டும் குழியுமாக மாறிய பழைய ரெயில்வே மேம்பால சாலை சீரமைக்க கனரக வாகன ஓட்டிகள் கோரிக்கை
அத்திப்பட்டு புதுநகரில் உள்ள பழைய ரெயில்வே மேம்பால சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டதால், அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கனரக வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம், இந்துஸ்தான் பெட்ரோலிய கழகம், இந்தியன் ஆயில் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை உள்பட 20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது.
இந்த பகுதியில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் சிறு துறைமுகம், கப்பல் செப்பனிடும் தளம் உள்பட பல நிறுவனங்கள் அமைந்து உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு செல்ல வசதியாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இருந்து வடசென்னை அனல்மின் நிலைய இணைப்பு சாலை உருவாக்கப்பட்டது.
இந்த சாலை வழியாக நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றது. மேலும் மீஞ்சூரில் இருந்து எண்ணூர், திருவொற்றியூருக்கு செல்லும் பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.
வடசென்னை அனல்மின் நிலைய இணைப்பு சாலையின் நடுவே அத்திப்பட்டு புதுநகரில் ரெயில்வே தண்டவாளத்தை கடப்பதற்காக மேம்பாலம் உள்ளது. 1994-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ரெயில்வே மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே இந்த பாலத்தின் அருகிலேயே மேலும் ஒரு பாலம் புதிதாக அமைக்கப்பட்டது.
ஆனாலும் இந்த பழைய ரெயில்வே மேம்பாலம் வழியாகவும் ஏராளமான கனரக வாகனங்கள் வடசென்னை அனல்மின் நிலையம், எண்ணூர் துறைமுகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றன.
கடந்த சில மாதங்களாக பழைய ரெயில்வே மேம்பால சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இதை கண்டுகொள்ளாததால் மேலும் பெரிய அளவில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, பாலத்தின் கான்கிரீட் தளம் வெளியே தெரியும் அளவுக்கு மோசமாக மாறிவிட்டது.
இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது மேம்பால கான்கிரீட் பகுதியில் விரிசல் ஏற்பட்டு பாலம் இடிந்து விழும் ஆபத்தும் ஏற்பட்டு உள்ளது. மேலும் கனரக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த வழியாக வாகனங்களை ஓட்டிச்செல்லும் போது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பாலத்தின் இரு புறங்களில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்பு சுவர்களும் சேதம் அடைந்து இருப்பதுடன், புதர்கள் மண்டிக் கிடக்கின்றது.
எனவே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் பழைய ரெயில்வே மேம்பால சாலையை சீரமைத்து, தடுப்பு சுவரையும் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், கனரக வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story