ஓசூர், தர்மபுரியில் போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்


ஓசூர், தர்மபுரியில் போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2018 4:00 AM IST (Updated: 23 Oct 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், டி.டி.எஸ்.எப். உள்பட பல்வேறு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று அனைத்து பணிமனைகளிலும் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

ஓசூர்,

போக்குவரத்து கழகங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், டி.டி.எஸ்.எப். உள்பட பல்வேறு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று அனைத்து பணிமனைகளிலும் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. ஓசூரில் உள்ள பணிமனை முன்பு தொ.மு.ச. மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், சி.ஐ.டி.யு. நிர்வாகி தண்டபாணி, ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தை சேர்ந்த சோமசுந்தரம், கார்த்திக் உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் தர்மபுரி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் நாகராசன் தலைமை தாங்கினார். போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஏ.ஐ.டி.யு.சி. மண்டல செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Next Story