ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் பல்லாவரத்தில் ஜனவரி 11-ந் தேதி நடக்கிறது


ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் பல்லாவரத்தில் ஜனவரி 11-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 22 Oct 2018 10:50 PM GMT (Updated: 22 Oct 2018 10:50 PM GMT)

ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் ஜனவரி 11-ந் தேதி பல்லாவரத்தில் நடக்கிறது. இதற்கு வருகிற 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை,

பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை, பல்லாவரத்தில் உள்ள ராணுவ முகாமில் அடுத்த ஆண்டு ஜனவரி 11-ந் தேதி ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வசிப்பவர்கள் கலந்துகொள்ளலாம். ஜூனியர் கமிஷன் அதிகாரி (மத போதகர்கள்) மற்றும் ஹவில்தார் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

3-ந் தேதிக்குள்

இதில் பங்கேற்க விரும்புவோர் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் நவம்பர் 3-ந் தேதிக்குள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அனுமதி அட்டை நவம்பர் 17-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும். அதன்பிறகு அனுமதி அட்டையை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

உடற்பயிற்சி, மருத்துவம் மற்றும் எழுத்து தேர்வுகளுக்கு யாருடைய உதவியையும் நாடவேண்டாம். முழு கடின உழைப்பு உள்ளவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story