சென்னையில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நாளை முதல் 15 நாட்கள் நடக்கிறது


சென்னையில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நாளை முதல் 15 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 22 Oct 2018 10:56 PM GMT (Updated: 22 Oct 2018 10:56 PM GMT)

சென்னையில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நாளை முதல் 15 நாட்கள் நடைபெற உள்ளது.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சிறந்த தொழில்முனைவோர்களை கண்டறியும் வகையில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் 14-ந்தேதி வரையிலான 15 நாட்கள் நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட தொழில் ஆர்வமுள்ளவர்கள், தொழில் பயிற்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்வது எப்படி? தொழில் தொடங்கவுள்ளோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள், திட்டங்கள் என்னென்ன? உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்படும்.

அதேபோல தொழில் முனைவோர்களுக்காக ‘அறிவு சார் சொத்துரிமைகள் மற்றும் குறைந்த செலவில் குறைபாடற்ற அதிக உற்பத்தி பெருக்குதல்’ குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு, நிறுவன வளாகத்தில் வருகிற 31-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

மேற்கண்ட பயிற்சிகளில் சேர விரும்புவோர் தங்கள் பெயரை தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 044- 22252081, 22252082, 8825416460, 8668102600 மற்றும் www.editn.in ஆகிய இணையதளத்தையும் தொடர்புகொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story