தங்க சங்கிலி என நினைத்து பெண்ணிடம் கவரிங் நகை பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு


தங்க சங்கிலி என நினைத்து பெண்ணிடம் கவரிங் நகை பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Oct 2018 3:45 AM IST (Updated: 23 Oct 2018 9:21 PM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோட்டில் தங்க சங்கிலி என நினைத்து பெண்ணிடம் கவரிங் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு பரங்கிமாவிளை பகுதியை சேர்ந்த நேசமணி மனைவி கமலம் (வயது 70). நேசமணி ஏற்கனவே இறந்து விட்டார். தற்போது கமலம் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கமலம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவு ஒரு மர்ம நபர் கதவை உடைத்து உள்ளே புகுந்து கமலத்தின் கழுத்தில் கிடந்த நகையை பறித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த கமலம் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் கமலத்தை மிரட்டி விட்டு நகையுடன் தப்பி ஓடினர்.

கமலம் அணிந்திருந்தது கவரிங் நகை. ஆனால் மர்மநபர், தங்க சங்கிலி என நினைத்து பறித்து சென்று விட்டார். இதுகுறித்து கமலம் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்போது அவர் போலீசாரிடம் கூறிய போது, மர்ம நபர் புரியாத மொழியில் பேசியதாக கூறினார். இதனால், அந்த நபர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.

Next Story