தஞ்சையில் அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரதம்


தஞ்சையில் அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 24 Oct 2018 4:00 AM IST (Updated: 23 Oct 2018 10:09 PM IST)
t-max-icont-min-icon

அகில பாரதிய அய்யப்ப தர்ம பிரசார சபா சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரதம் நடந்தது.

தஞ்சாவூர்,

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டியும், சபரிமலையின் பாரம்பரிய மிக்க பிரம்மச்சரிய ஆன்மிக வழிபாட்டு முறைகளை கையாள கோரியும் அகில பாரதிய அய்யப்ப தர்ம பிரசார சபா சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரதம் நடந்தது. இதற்கு நிறுவன தலைவர் பி.என்.கே.மேனன் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட தலைவர் கந்தசாமி, தேசியக்குழு உறுப்பனிர்கள் கணேசன், சிவசுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தேசிய பொருளாளர் ஆறுமுகம், நீலகிரி ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீராம் மற்றும் அய்யப்ப பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story