ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 14 குழந்தைகள் உள்பட 58 பேர் அனுமதி 6 பேருக்கு டெங்கு - பன்றிகாய்ச்சல் அறிகுறி
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 14 குழந்தைகள் உள்பட 58 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் டெங்கு- பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி,
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் காலத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் வருவது வழக்கமாக உள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றத்தால் நோய் உருவாகிறது. மேலும் மழையால் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது. முதலில் சளி, இருமல், காய்ச்சல் உருவாகி, அதுவே சில வேளைகளில் வைரஸ் காய்ச்சலாக மாறுகிறது.
மாவட்டந்தோறும் டெங்கு பரவுவதை தடுக்கும் வகையில், தீவிர நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் லால்குடியை சேர்ந்த சாரதா என்ற பெண் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் நேற்று முன்தினம் உடல்நலம் தேறி அவர் வீடு திரும்பினார். இந்தநிலையில் தினமும் சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று வரை சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்காக 14 குழந்தைகள் உள்பட 58 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் இதுபோன்ற வைரஸ் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு தனியாக 5 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 புறநோயாளிகள் சிகிச்சை மையமும் திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கென தனியாக வார்டுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனி வார்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அனைத்து படுக்கைகளுக்கும் மேல் கொசுவலை கட்டப்பட்டுள்ளது.
தனி வார்டில் வைரஸ் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனிவார்டில் சேவை செய்யும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களுக்கு வைரஸ் கிருமிகள் தொற்றிவிடாமல் பாதுகாப்பாக இருக்கும் வகையில், அவர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு (மாஸ்க்) பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சல் மற்றும் சளி, இருமலுக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து டீன் டாக்டர் அனிதா கூறியதாவது:-
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்காக தனிவார்டுகள் உள்ளன. தற்போது மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் பலருக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டு, அதுவே வைரஸ் காய்ச்சலாக மாறிவிடுகிறது. எனவே, வைரஸ் காய்ச்சலுக்காக 5 தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட சாரதா என்ற பெண் தீவிர சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பி விட்டார். தற்போது மேலும் 3 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்தமாதிரி, சளி உள்ளிட்டவை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்னும் வரவில்லை.
மேலும் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் முதல் நர்சு உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருமே பாதுகாப்பாக இருக்க கையுறை மற்றும் ‘மாஸ்க்’ அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. நோயாளிகளுடன் வரும் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் காய்ச்சல் தடுப்பு மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை 3 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தனி வார்டில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 3 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story