கொசுப்புழு உற்பத்தி ஆதாரம் கண்டறியப்பட்டால் அபராதம் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி எச்சரிக்கை


கொசுப்புழு உற்பத்தி ஆதாரம் கண்டறியப்பட்டால் அபராதம் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Oct 2018 10:45 PM GMT (Updated: 23 Oct 2018 8:59 PM GMT)

கொசுப்புழு உற்பத்திக்கான ஆதாரம் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூர்,

அனைத்து அரசு மற்றும் தனியார் துறை வளாகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், சிமெண்டு தொழிற்சாலைகள், தனியார் வணிக வளாக கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலும் அங்கு உள்ள தண்ணீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் வினியோகிக்கும் எந்திரங்களை சுகாதார முறையில் பராமரித்திட வேண்டும். மேற்காணும் இடங்களில் நீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தி காணப்படும் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் அபராத தொகை வசூலிக்கப்படும். அத்துடன் பிரதிவாரம் வியாழக்கிழமை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தினமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வியாழக்கிழமை தோறும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் காணப்படும் ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, அதனை அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மருத்துவ அலுவலர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு இறை வணக்கத்தின் போது காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தவும் மற்றும் சுகாதார உறுதிமொழி ஏற்க வேண்டும். காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் இதர பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் நிலவேம்பு கசாயம், உப்புக்கரைசல் ஆகியவை வழங்கிட வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உள்நோயாளி களுக்கு சாப்பாட்டு கஞ்சி வழங்கிட வேண்டும். தற்காலிக மஸ்தூர்கள் வீடு வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்புப்பணியில் ஈடுபடும் பொது மக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக எவ்வித மருத்துவமும் மேற்கொள்ளாமல் காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story