நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தமிழில் கேள்வி கேட்க வேண்டும் குமரி அனந்தன் வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தமிழில் கேள்வி கேட்க வேண்டும் என குமரி அனந்தன் வலியுறுத்தினார்.
நாமக்கல்,
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரி பொன் விழா ஆண்டை முன்னிட்டு நாமக்கல் கவிஞரின் 130-வது பிறந்த நாள் விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை தாங்கினார். நாமக்கல் கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி, பேராசிரியர் அரசு பரமேஸ்வரன், நாமக்கல் கவிஞரின் மகன் ராஜா வெங்கட்ராமன், பேரன் பாண்டியன் ஆகியோர் பேசினர்.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கவிஞர் ராமலிங்கத்துக்கு பொது இடத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் சிலை வைக்க வேண்டும். அரசு இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது அரசிடம் இடத்தை கேட்டு வாங்கி, கவிஞருக்கு சிலை அமைக்கும் பணியை கவிஞர் மீது பற்று உள்ளவர்கள் செய்ய வேண்டும். இதேபோல் நாமக்கல் கவிஞரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
கடந்த 1977-ம் ஆண்டு நான் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, அவைக்கு சென்ற போது, அங்கு தமிழில் கேள்வி எழுப்ப எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு முறையும் அவையில் கேள்வி எழுப்ப முற்பட்டதால், 1978-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி தமிழில் கேள்வி எழுப்ப எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதுவரை அவையில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வி எழுப்ப முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது தமிழகம், புதுச்சேரியில் இருந்து 40 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் ஒருவராது தமிழில் கேள்வி எழுப்புகின்றனரா? இல்லை. எனவே நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தமிழில் கேள்வி கேட்க வேண்டும்.
மது குடிப்பதை தடுத்தால் கோடி புண்ணியம் என நாமக்கல் கவிஞர் கூறி உள்ளார். நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த மகாத்மா காந்தி படத்தை போட்ட ரூபாய் நோட்டை டாஸ்மாக் கடையில் கொடுத்து மது வாங்கும் அவலம் இங்கு உள்ளது. மது குடிப்பதை தடுக்க பொதுமக்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது :-
நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசனை காங்கிரஸ் கூட்டணியில் சேர்ப்பதில் தவறு இல்லை. ஜனநாயகத்தை காப்பதற்கும், மதவேறுபாடு இல்லாத ஆட்சியை அமைப்பதற்கும் உறுதுணையாக உள்ள கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கும். தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றால் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவோம்.
பாரத மாதா கோவிலை கட்ட எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசு ரூ.1½ கோடி நிதி ஒதுக்கி உள்ளது. பாரத மாதா கோவில் கட்டுமான பணிகளை அரசு விரைவில் தொடங்க வேண்டும். மேலும் இந்த கோவிலை கட்ட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த பதவியில், பொறுப்பில் இருந்தாலும், அப்படி நடக்கவில்லை என மக்கள் நம்புகின்ற வகையில் ஆதாரங்களோடு வெளியே சொன்னால், அவர்கள் இருக்கின்ற பதவியிலேயே தொடர்ந்து இருக்கலாம். ஆதாரங்களை காட்ட முடியவில்லை எனில் பதவியில் இருப்பது நியாயமில்லை என்றார்.

Related Tags :
Next Story