கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி,
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்றுமுன்தினம் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விவசாய மாநில குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய துணைசெயலாளர் சிவராஜ், கிளை செயலாளர் தவமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கீழையூர் ஒன்றியம் தலையாமழை ஊராட்சியில் தண்ணீரின்றி பயிர் கருகியதை பார்த்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி ராமமூர்த்தி குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.5 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். ஒன்றியத்தில் பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை உடனே சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்ட குழு உறுப்பினர் கண்ணையன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story