வேளாங்கண்ணி அருகே ரூ.70 ஆயிரம் புகையிலை, குட்கா பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது
வேளாங்கண்ணி அருகே ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை, குட்கா பொருட்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா ஆகிய பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், காசிமணி மற்றும் போலீசார் வேளாங்கண்ணி கடைத்தெருவில் நேற்று வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவரை மறித்து சோதனை செய்தனர். சோதனையின் போது தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா ஆகிய பொருட்களை திருவாரூர் எல்லையம்மன் கோவில் கீழவீதியை சேர்ந்த ரகுராமன் (வயது 44) கடத்தி வந்தது தெரியவந்தது.
பறிமுதல்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுராமனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை, குட்கா ஆகிய பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story