சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை - கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை - கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 25 Oct 2018 3:15 AM IST (Updated: 25 Oct 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அடைக்கலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 37). கூலி தொழிலாளி. கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி, 5-ம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமியை, மதிய உணவு இடைவேளையின் போது, தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்பில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பால்ராஜிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார். 

Next Story