டெங்கு உள்ளிட்ட நோய் தாக்குதலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் கலெக்டர் பேட்டி


டெங்கு உள்ளிட்ட நோய் தாக்குதலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 25 Oct 2018 4:30 AM IST (Updated: 25 Oct 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு உள்ளிட்ட எந்த நோய் தாக்குதல் களையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

முசிறி,

முசிறி அருகே தண்டலைப்புத்தூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். முசிறி எம்.எல்.ஏ. செல்வராஜ் முன்னிலை வகித்தார். முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் தங்கள் துறைகளில் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து தெரிவித்தனர்.

முகாமில் வருவாய்துறை, வேளாண்மைத்துறை, சமூகநலம், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 2 ஆயிரத்து 377 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது தண்டலைப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம், சுற்றுச்சுவர், தா.பேட்டை அடுத்த வளையெடுப்பு, பைத்தம்பாறை, மாவலிப்பட்டி பகுதி கிராமங்களில் குரங்குகளின் தொல் லை அதிகமாக உள்ளது. அவைகள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. கால்நடைகளை வாரத்திற்கு மூன்று முறை பரிசோதிக்க டாக்டர்கள் வரவேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். முடிவில் முசிறி தாசில்தார் சுப்பிரமணியன் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து முசிறி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கலெக்டரும், எம்.எல்.ஏ.வும் சத்துமாவுகளையும் பரிசுபொருட்களும், வழங்கினர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்ட குளோரின் கலந்த குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கவும், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார பணிகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெங்கு, பன்றிகாய்ச்சல் பரவாமல் இருக்க கூடுதலாக சுகாதார மஸ்தூர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும். வீடுகளின் அருகே தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துகொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றுகொள்ளவேண்டும். அதையும் மீறி பொதுமக்களுக்கு டெங்கு உள்ளிட்ட எந்த நோய் தாக்குதல் ஏற்பட்டாலும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story